வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் ஊராட்சியின் பட்ஜெட்; 1,640 குடும்பங்களிடமும் நேரில் சமர்ப்பித்த ஊராட்சி மன்றத் தலைவர்!




வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் ஊராட்சியின் பட்ஜெட்; 1,640 குடும்பங்களிடமும் நேரில் சமர்ப்பித்த ஊராட்சி மன்றத் தலைவர்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கருப்பம்புலம் ஊராட்சியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மக்களிடம் பட்ஜெட் தாக்கல் செய்த ஊராட்சிமன்றத் தலைவருக்குப் பாராட்டு குவிகிறது.

வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சியில் இரண்டாவது ஆண்டாக மக்களிடம் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவரான  சுப்புராமன். கருப்பம்புலம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன் ஏற்றிவைத்தார். அதன் பிறகு வளர்ச்சிப்பணிகள் குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தினார். ஊராட்சியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வரவு, செலவு திட்ட கணக்குகளை வெளிப்படைத்தன்மையோடு தாக்கல் செய்தார். பின் வரவு செலவு கணக்குகளை அச்சடித்து, துண்டுப்பிரசுரங்களை ஊராட்சியிலுள்ள 1,640 குடும்பங்களுக்கும் வீடு வீடாகச் சென்று ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன் வழங்கினார்.


கருப்பம்புலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும்  சுப்புராமன் பட்டதாரி இளைஞர். இவர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் ஊராட்சிப் பணிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மைகொண்டதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து வரவு செலவு கணக்குகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டி ஊராட்சி மன்றத்தில் மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

மக்கள் குறைகளைக்  கேட்பதற்கு தனி வாட்ஸ் அப் குரூப்  உருவாக்கி, மக்கள் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்த்துவருகிறார். சென்ற ஆண்டும்  இதேபோல வரவு, செலவு கணக்கைச் சமர்ப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த வெளிப்படையான ஊராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments