சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 25 அதிகரித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு  875.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் விலை மேலும் ரூபாய் 25 அதிகரித்துள்ளது. ரூபாய் 25 விலை அதிகரிப்பால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.850.50 இலிருந்து ரூ. 875.50 ஆக அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா காரணமாகவாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தற்போது தான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதற்குள் இதுபோன்ற விலையேற்ற முடிவுகள் சாமானியர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments