அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்! சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!!
அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்! சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!!

அறந்தாங்கியில் 14-வது வார்டு LN.புரம் - அவுலியா நகர் ஆகிவற்றை இணைக்கும் பிரதான சாலை அமைத்துதர வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அறிவிக்கப் பட்ட சாலை மறியல் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.அறந்தாங்கி 14-வது வார்டு LN.புரம் - அவுலியா நகர் ஆகிவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் சன்னதிவயல் 7 ஆகிய பகுதியில் சாலை அமைத்துதர பொதுமக்கள் பல வருடங்களாக கோரி வருகிறார்கள். நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது. புதிய சாலை அமைத்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களை திரட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி அறந்தாங்கி நகரம் சார்பில் 19-08-21 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
அவுலியா நகர் பஸ்டாபில் சாலை மறியல் நடத்த இருக்கிறோம் என்ற துண்டுபிரசுர அறிவிப்பை தொடர்ந்து நேற்று 17-08-21 செவ்வாய் அன்று காலை 11 மணிக்கு அறந்தாங்கி  வட்டாச்சியர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும்  பொறியாளர்கள் முன்னிலையில் சமாதான பேச்சு நடைபெற்றது.

அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் தெருவிளக்குகளை ஒரு மாதத்தில் அமைத்து தருவது எனவும் அனைத்து பகுதிகளிலும் மூன்று மாதத்தில் புதிய சாலைகள் அமைத்துதரப்படும் எனவும், தற்போது உடனடியாக பேட்ச் ஒர்க் எனப்படும் தற்காலிக பணிகள் செய்யப்படும் எனவும் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.

அதனடிப்படையில் 19-08-21 வியாழக்கிழமை அன்று அறந்தாங்கி அவுலியா நகர் பஸ்டாப்பில் மனிதநேய ஜனநாயக கட்சி அறந்தாங்கி நகரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை மறியல் கைவிடப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments