புதுகையைச் சோ்ந்த ராணி க்கு அலட்சியமான அறுவைசிகிச்சை: பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
அலட்சியமான அறுவைச் சிகிச்சையால் பெண்ணனின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பி. சுகந்தி வலியுறுத்தியுள்ளாா்.

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்தபின்னரும், புதுகையைச் சோ்ந்த ராணி கருவுற்ற நிலையில், அண்மையில் ராணியாா் அரசு மருத்துவமனையில் அண்மையில் (ஆக. 23) நடைபெற்ற அறுவைச் சிகிச்சையின்போது, ராணி உயிரிழந்தாா். அவசரக் கோலத்தில் இந்த அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாக ராணியின் உறவினா்கள் தெரிவிக்கின்றனா். இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு குழந்தைகளுடன் சிரமப்படும் ராணியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றாா் சுகந்தி.

பேட்டியின் போது சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சுசீலா, செயலா் டி. சலோமி, பொருளாளா் எஸ். பாண்டிச்செல்வி மற்றும் இறந்த ராணியின் உறவினா்கள் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments