விராலிமலையில் முன்னாள் முதல்வா் கலைஞர் மு. கருணாநிதி நினைவு மராத்தான் போட்டி
விராலிமலையில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் பங்கேற்று ஆா்வமுடன் ஓடினா். விராலிமலையில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் பங்கேற்று ஆா்வமுடன் ஓடினா்.
விராலிமலை: விராலிமலையில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவு மராத்தான் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.  

மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாரத்தான் போட்டி விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  விராலிமலை - கீரனூா் பிரிவு சாலையில்  தொடங்கிய மாரத்தான் போட்டியை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினாா். இதில், சிறுவா்கள், இளைஞா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். 

கீரனூா் சாலையில் தொடங்கி சோதனைச்சாவடி, கிரிவலப் பாதை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், கடைவீதி வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே மாரத்தான் போட்டி நிறைவடைந்தது. இதில், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் பழனியப்பன், அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலா் சந்திரன், விராலிமலை ஒன்றிய செயலா் இளங்குமரன் (மேற்கு), சத்தியசீலன் (கிழக்கு), அய்யப்பன் (மத்தியம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments