மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளனர். எனினும், கரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைவாக தடுப்பூசி செலுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வெ.இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று காலை தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments