கடந்த திமுக ஆட்சியில் எஞ்சிய டிவிக்களை பயன்படுத்தக் கோரிக்கை        

புதுக்கோட்டை: புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளியில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது போக எஞ்சியுள்ள இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொதுப்பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும் என நகர திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புதுக்கோட்டை நகர திமுக செயலா் க. நைனாமுகமது அளித்துள்ள மனு: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியின் திட்டத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ளவை, புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அவற்றை எடுத்து பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments