கீரனூர் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்த தெற்கு துவரவயலை சேர்ந்த சிவசங்கர் (வயது 30), மகாலிங்கம் (31) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருமயம் சிறையில் அடைக்கப்பட்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments