ஞாயிற்றுகிழமைகளில் முக்கிய இடங்களுக்கு செல்ல முழுவதும் தடை.! தமிழகம் அரசு அதிரடி உத்தரவு.!தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலைபரவல் வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. ஆனால், இந்திய அளவில் மூன்றாவது அலை எப்போது வேண்டும் என்றாலும் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரத்தின் இறுதி 3 நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதால் அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments