மீமிசல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1200 மது பாட்டில் அழிப்பு.! போலிசார் அதிரடி!!மீமிசல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1200 மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் சில மாதங்களுக்கு முன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மீமிசல் பகுதியில் சட்டவிரோதமாக விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. மது விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1,200 மதுபாட்டில்கள் நேற்று மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments