புதுக்கோட்டை மாவட்டத்தில் சோலார் மின் மோட்டார்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!



புதுக்கோட்டை மாவட்டத்தில் சூரிய ஒளி சக்தியால் (சோலார்) இயங்கும் மின் மோட்டார்களை இயக்குவது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான திட்டம் வேளாண் பொறியியல் துறை, மின்சார துறை மற்றும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம். இத்திட்டமானது தமிழ்நாடு மின்வாரிய மின் வினியோக கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட இலவச விவசாய மின் மோட்டார்களை சூரிய சக்தியின் மின் ஆற்றல் மூலமும் இணைத்து இயக்குதல் ஆகும். இத்திட்டத்தில் மத்திய அரசின் மானியம் 30 சதவீதமும், மாநில அரசின் மானியம் 30 சதவீதமும், விவசாயிகளின் பங்களிப்பு தொகையாக செலுத்த வேன்டிய 40 சதவீதமும் தொகையில் 30 சதவீத தொகையை வங்கியிலிருந்து கடனாக வங்கியின் நடவடிக்கைகளுக்குட்பட்டு பெற்று விவசாயிகள் பயனடையலாம். 

மேலும், இத்திட்டத்தில் சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்திக்கு 1 யூனிட்டுக்கு ரூ.2.28-ம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.33,858-ம், ஊக்கத்தொகையாக 0.50 பைசா வீதம் வருடத்திற்கு ரூ.3,750-ம் சேர்த்து தோராயமாக ரூ.40 ஆயிரத்திற்கு மேல் வருமானம் ஈட்டலாம். 

இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் விருப்ப விண்ணப்பத்தினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி பொறியாளரிடம் பதிவு செய்யலாம் என கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments