தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்: புதுக்கோட்டை ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றம்!!தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் குடிநீா் வசதி, மின்சார வசதி செய்து தரவேண்டும் என சத்துணவு ஊழியா் சங்க புதுக்கோட்டை ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, ஒன்றியத் துணைத் தலைவா் தேவராஜ் தலைமை வகித்தாா். சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயலா் சக்தி சிறப்புரை நிகழ்த்தினாா்.

மாநாட்டில், சத்துணவு ஊழியா்களுக்கு தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து சத்துணவு மையங்களும் குடிநீா் வசதி, மின்சார வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments