புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை உட்பட 2 இடங்களில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்த வசதி!தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட முக்கிய மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட வசதி ஏற்படுத்தப்பட்டன. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலும் 2 இடங்களில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்வில் டீன் பூவதி தலைமை தாங்கினார். டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments