24 மணி நேரமும்.. தமிழ்நாட்டில் இன்று முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்..!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையங்கள். தமிழக அரசு அறிவிப்பு தடுப்பூசி ஒன்றுதான் நமக்கு இப்போதைக்கு கை கொடுத்து உதவும் ஒரே நம்பிக்கை என்பதால், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, அவைகளை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது.. மாநில அரசுள், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது... இதைதவிர, ஆங்காங்கே முகாம்கள் நடத்தியும் தடுப்பூசி செலுத்தி வருகிறது... எப்படி பார்த்தாலும், பொதுமக்கள் எல்லாருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை விரைவாக செலுத்தி விட வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்காக இருக்கிறது..

இதற்கான அனைத்து பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்... எனினும், தடுப்பூசி தயாரிக்கும் பணியில் குறைவான நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதால், அதனை கொள்முதல் செய்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது... இதனால் பல இடங்களில் தடுப்பூசி செலுத்த முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் நிலையும் சில சமயம் ஏற்பட்டு விடுகிறது.

மேலும், தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசி தேவைப்படும் நிலையில், குறைவான தடுப்பூசிகளே ஒதுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. அதன்படியே நேற்று, டிஎம்எஸ் வளாகத்தில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய தடுப்பூசி மையத்தையும் திறந்து வைத்தார்.

இதுசம்பந்தமாக அமைச்சர் சொல்லும்போது, நாளை முதல் அதாவது இன்று முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும்.. இதன் மூலம், தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்த முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில், இன்றுமுதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

ஏற்கனவே சென்னையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது... ஏற்கனவே 80 வயதைக் கடந்த முதியவர்களுக்கு வீடுகளுக்கு சென்றே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தவிர, சிறப்பு முகாம்கள் நடத்தி அதன்மூலமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது... இதைதவிர, உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது... இப்போது முழு நேரமும் தடுப்பூசிகள் அனைத்து தரப்பினருக்குமே செலுத்தப்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments