மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு!மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ.முகமது ஜான கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்தத் தேர்தல், செப்டம்பர் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும், இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, திமுக வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவின் இணைச்செயலாளராக உள்ளார்.

திமுக நாடாளுமன்றத்தில் போதிய பலத்தோடு உள்ளதால, எம்.எம்.அபதுல்லா எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments