மீமிசல் அருகே இறால் பண்ணையில் வயர் திருடிய 2 பேர் கைது!மீமிசல் அருகே இறால் பண்ணையில் வயர் திருடிய 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள உப்பளம் பகுதியில் தனியார் இறால்பண்ணை உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையில் இருந்த காப்பர் வயர்களை திருடி கொண்டு இருந்தனர். 

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வயர்களை திருடிக்கொண்டிருந்த மணமேல்குடி ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியன் (வயது 27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments