ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் நடனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்!ஆவுடையார்கோவிலில் கொரோனா வைரஸ் குறித்து மாணவிகள் நடனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் மாணவிகள் கொரோனா வைரஸ் வடிவிலான முககவசம் அணிந்து கொரோனா வைரஸ் பாடலுக்கு நடனமாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments