35 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த அரசுப் பள்ளி மாணவர்கள்: ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி






ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1985- 86ஆம் ஆண்டில் படித்த மாணவ, மாணவியர் மீண்டும் அதே பள்ளியில் 35 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1985- 86ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவரில் ஒருவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இசிஜி ஆபரேட்டராக உள்ள வில்சன் புஷ்பராகம். அவர் தனது நண்பர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிச் சந்திக்க வைக்கலாமே என்று யோசித்தார். முன்னாள் மாணவர்கள் அனைவரின் செல்பேசி எண்களையும் தேடிக் கண்டறிந்து பள்ளிப் பருவ நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

இந்த முன்னாள் மாணவர்களில் பலர் வணிகர்களாகவும், ஆசிரியர்களாகவும் உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் சாம்நியூபிகின் தனது நண்பர்களை உற்சாகப்படுத்த இரு தங்கக் காசுகள், இரு வெள்ளிக் காசுகளைப் பரிசாக வழங்கினார். இந்தக் காசுகள் குலுக்கல் முறையில் 4 பேருக்கு வழங்கப்பட்டன. தங்கக் காசுகள் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பார்வதிக்கும், வெள்ளிக் காசுகள் சக்திவேல், தமிழரசிக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மராஜ், கார்மேகம், ஜெர்மினியான்ஸ், தாமஸ் ஆகியோர் செய்திருந்தனர். தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து வந்தவர்கள், 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களை உணர்ச்சிப் பெருக்கோடு சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments