கோபாலப்பட்டிணம் , மீமிசலில் SDPI கட்சியின் சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்


கோபாலப்பட்டிணம் , மீமிசலில் SDPI கட்சியின் சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டபட்டது.

75  வது சுதந்திர தினத்தை முன்னிட்டு..SDPI கட்சியின் சார்பாக கோபாலபட்டினம் நுழைவு வாயில், பாரத ஸ்டேட் வங்கி அருகில் மற்றும் மீமிசல் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை சரியாக 10:00 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    
எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில்,
மீமிசல் பேருந்து நிலையத்தில் மீமிசல் நகர தலைவர் அரசை முகமது இப்ராஹிம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். மீமிசல்  நகர செயலாளர் சேக் அப்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு வந்திருந்த அனைவரும் சுதந்திர தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
   
இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி அருகில்  மீமிசல் நகர பிரதிநிதி  OSJS யாசின்அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். 

 கோபாலப்பட்டினம் நுழைவு வாயில் அருகில் கோபாலபட்டினம் கிளை செயலாளர் ஷேக் பரீத் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். 

  இந்நிகழ்வில் அஹமது தம்பி, ரபீக் உள்ளிட்ட கோபாலபட்டினம், அரசநகரிப்பட்டினம் கிளை,  மீமிசல் நகர நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

SDPI கட்சி
மீமிசல் நகரம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments