பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்; பனை மேம்பாட்டுக்கு ரூ.3 கோடி



பொது நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (13.08.2021) சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறைகளுக்கான பல்வேறு  ஒதுக்கீடுகளை அமைச்சர் வாசித்தார். அதில் பனை மரம் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களின் உற்பத்தி தொடர்பாக பல அறிவிப்புகளை வாசித்தார். 

பனைமரத்தின் பரப்பு வெகுவாக குறைந்துவருவதால், அதை அதிகரிக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனை கன்றுகளும் கொடுக்கப்படும். 

பனை மேம்பாட்டு இயக்கம் தொடங்க முன்னெடுப்புகள் எடுக்கப்படும். 

ஒரு பனை மரத்தை வேரோடு அகற்ற வேண்டும் என்றால் கூட மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். 

பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments