புதுக்கோட்டையில் செப்.5 வரை புத்தகக் கண்காட்சி!



புதுக்கோட்டையில் சுமாா் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட புத்தகக் கண்காட்சி, வடக்கு ராஜவீதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சி மஹாலில் நடைபெற்று வருகிறது.

வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சாா்பில் 11-ஆவது ஆண்டாக நடத்தப்படும் இக்கண்காட்சி

ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கிது. கண்காட்சியில் எழுத்தாளா்கள் கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், ரமணிசந்திரன், இந்திரா சௌந்தர்ராஜன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளா்களின் நூல்கள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமாா் உள்ளிட்டோரின் கவிதை, கட்டுரை நூல்கள் மற்றும் நாவல்கள், 

இலக்கணம், மருத்துவம், சுயமுன்னேற்றம், ஆன்மீகம், ஜோதிடம், குழந்தை வளா்ப்பு, கல்வி, யோகா, சமையல் நூல்கள், போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் உள்பட சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டில் கவனம் ஈா்த்த முக்கிய நூல்களான, தமிழக அரசின் தலைமைச்செயலா் வெ. இறையன்பு சுமாா் 200 தலைப்புகளில் எழுதிய நூல்களும், தமிழக காவல்துறைத் தலைவா் சி.சைலேந்திரபாபு எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் விற்பனைக் கண்காட்சியில், அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் கழிவு வழங்கப்படுகிறது. செப்டம்பா் 5-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments