புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி!




இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஆடு வளர்ப்பு குறித்த 10 நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுமென அறிவித்துள்ளது.

கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்களுக்கு இலவச மதிய உணவு, சீருடை, பயிற்சி உபகரணங்கள் உட்பட பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆடு வளர்ப்பு  குறித்து 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியின் போது தேநீர், மதிய உணவு, சீருடை, பயிற்சி உபகரணங்கள் இலவசம்.

இதில் சேர விரும்பும் 18 முதல் 45 வயது வரையுள்ள 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற இளைஞர்கள்  3 புகைப்படங்கள், நூறு நாள் வேலை அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் செல்லிடப்பேசி எண் ஆகியவைகளைக் குறிப்பிட்டு  2021ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள், 1506/2 நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மேல நான்காம் வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை. 622001 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர உள்ளவருக்கோ அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு நூறு நாள் வேலை அட்டை உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும்.

தொடர்புக்கு: 04322225339 , 07010957772.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments