அறந்தாங்கியில் 59 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்! மூன்று வாலிபர்கள் கைது!!அறந்தாங்கியில் 59 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு இளைஞர்கள் சிலர் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு புகையிலை பொருட்களை விற்கவும், அதனை பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

இதனை மீறி விற்போர் மீது தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளிலும் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அறந்தாங்கி போலீசார் நேற்று எல்.என்.புரம், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(வயது 24), கார்த்திகேயன் (25), விஜய் (21) ஆகிய 3 பேர் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் 59 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் சதாம் உசேன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments