அறந்தாங்கியில் மணல் குவாரி அமைக்கக்கோரி தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் ஊர்வலம் சென்று கோட்டாட்சியரிடம் மனு அளிப்பு!



அறந்தாங்கியில் மணல் குவாரி அமைக்கக்கோரி தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆறு உள்ளிட்ட இடங்களில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மணலுக்கு மாற்று ஏற்பாடாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மணலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், அறந்தாங்கி ஒன்றியத்தில் மணல் குவாரி அமைக்கக்கோரி நேற்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஜயபுரம், மங்கள்நாடு, கொடிவயல், குறிஞ்சாங்கோட்டை, சுப்ரமணியபுரம், ராஜேந்திரபுரம், மாத்தூர், பாலகிருஷ்ணாபுரம், ஆயிங்குடி, மாத்தூர், அரசர்குளம், கொன்னக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் அமரசிம்மேந்திரபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறபட்டு அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.

பின்னர், கோட்டாட்சியர் சொர்ணராஜிடம் மனு கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் ஏ.ஐ.டி.யூ.சி, மணல் மாட்டு வண்டி, கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் ஒரு சேர மாட்டு வண்டிகள் அணிவகுத்து சென்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments