அம்மாபட்டினத்தில் லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரி AIMIM கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு!



அம்மாபட்டினத்தில் லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரி AIMIM கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் அம்மாபட்டினத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும் என மஸ்லிஜ் கட்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) மாநில மகளிரணிச் செயலா் பாத்திமா மஸ்ரினா தலைமையிலான அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்

அம்மாபட்டினத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக செயல்பட வைக்க வேண்டும்.

இப்பகுதியில் பெண்கள் மட்டுமே குளிக்கும் மரவன்குளத்தைச் சுற்றி நடைப்பயிற்சி மேடை அமைத்துத் தர வேண்டும். அம்மாபட்டினத்தில் சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும்.

எங்கள் பகுதியில் சரளமாகப் புழங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையையும், கஞ்சா விற்பனையையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மவ்லவி A.R சுல்தான் தேவ்பந்தி, லஞ்ச ஒழிப்பு பறக்கும் படை செயலாளர் சையத் இப்ராஹிம் மற்றும் அம்மாபட்டினம் சகோதரிகள் உடன் இருந்தனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments