ஆவுடையார்கோவில் அருகே கரூரில் வைக்கோல் ஏற்றி சென்ற மினி லாரி நடுரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!ஆவுடையார்கோவில் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற மினி லாரி நடுரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள ஒக்கூரில் இருந்து ஒரு மினி லாரி வைக்கோல் ஏற்றிக்கொண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. மினி லாரியை காளிமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த மினிலாரி ஆவுடையார்கோவில் அருகே கரூர் கடைவீதியில் வந்த போது, மின்கம்பி வைக்கோல் மீது உரசியதில் தீப்பற்றிக் கொண்டது. அப்போது, காற்று வீசியதால் தீ வேகமாக பரவியது. 

இதைபார்த்த அப்பகுதி மக்கள் கூச்சல் போட்டனர். இதனையடுத்து மினி லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் காளிமுத்து இறங்கி ஓடினார்.
இதற்கிடையில் தீ மினி லாரியிலும் பற்றிக்கொண்டு மள, மளவென பரவியது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் போலீசார் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ பரவியது. 

அதன்பின் தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். 

இந்த விபத்தில் டிரைவர் காளிமுத்து காயம் இன்றி தப்பினார். ஆனால் மினிலாரி முழுவதும் எரிந்து நாசமானது. கரூர் கடைவீதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments