திருவாரூர்-காரைக்குடி இடையே டெமு ரெயிலுக்கு அறந்தாங்கியில் வரவேற்பு!திருவாரூரில் இருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு அகலபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றும் ரெயில் சேவை இல்லாமல் கிடப்பில் கிடந்தது.

இந்நிலையில் நேற்று முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.04 மணிக்கு வந்து 1.05 புறப்பட்டு சென்றது. 

இந்த ரெயிலுக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் காரைக்குடியில் இருந்து மாலை 3.29 மணிக்கு அறந்தாங்கி வந்தது. பின்னர் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. 

ஏற்கனவே இந்த ரெயில் நின்று சென்ற மாங்குடி, மாவூர்ரோடு, அம்மனுர், ஆலத்தம்பாடி, மணலி, முத்துப்பேட்டை, ஒட்டங்காடு, வாளரமாணிக்கம், கண்டனூர், புதுவயல் ஆகிய இடங்களில் ரெயில் நிறுத்தம் நீக்கப்பட்டு உள்ளது. தற்போது ரெயில் சேவை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments