ஆவுடையார்கோவிலில் சரக்கு வாகன ஓட்டுனர்-உரிமையாளர் சங்கம் தொடக்கம்ஆவுடையார்கோவிலில் சி.ஐ.டி.யூ. சார்பில் மாணிக்கவாசகர் சரக்கு வாகன ஓட்டுனர், உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா கிளை செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பெயர் பலகையை கட்டுமான தொழிலாளர்சங்க மாவட்ட செயலாளர் அன்புமணவாளன் திறந்து வைத்தார். சங்க கொடியை தனியார் வாகன ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் ரெத்தினவேலு ஏற்றினார், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். 


இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், நெருப்பு முருகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments