மீமிசல் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீன்!மீீீமிிசல் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீன் கரை ஒதுங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள குமரப்பன் வயல் கிராமத்தில் இறந்த நிலையில் டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின்போில் கடலோர காவல் குழுமத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து கரை ஒதுங்கிய டால்பின் மீனை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி ராஜேந்திரன் மேற்பார்வையில் டால்பின் மீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. 

இறந்த டால்பின் மீன் 3 அடி நீளமும், 1 அடி அகலமும் சுமார் 100 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த டால்பின் மீன் எப்படி செத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments