விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை காவல்துறையினர்

விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை காவல்துறையினர் 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா இ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணியன் இவர் திருச்சியில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 04.08.2021-ந்தேதி சுப்பிரமணி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினரும் அன்று சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு, மதியம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.17 ஆயிரம் மற்றும் மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், விராலிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திருவேங்கடம் அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் திருடிய குற்றவாளியை கண்டுபிடித்து 09.08.2021 ஆம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம், சவேரியார் பாளையத்திற்கு சென்று விராலிமலை காவல்துறையினர்   குற்றவாளியை கைது செய்தனர்.

என்றும் மக்கள் பாதுகாப்பிற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments