கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்! ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்!!கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பால்வாடியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஆர்வத்துடன் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 02.08.2021 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கொரோனா இலவச தடுப்பூசி முகாம் அவுலியா நகர் பால்வாடியில் நடைபெற்றது.

முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். பொதுமக்கள் காலை முதல் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமில் 27 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

குறிப்பு:

கோபாலப்பட்டிணத்தில் எப்போதவது நடக்கும் தடுப்பூசி முகாமில் உங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்படும். எனவே நீங்கள் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

தடுப்பூசி செலுத்த போகும் போது தங்களது ஆதார் அட்டையை எடுத்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் பாஸ்போர்ட் எடுத்து கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments