GPM மக்கள் மேடையின் குடி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை பற்றி அவதூறு பரப்பபட்டு வரும் தவறான செய்தி குறித்து ஆலோசனை குழுவின் தன்னிலை விளக்கம்!



GPM மக்கள் மேடை சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மக்கள் சேவையின் அடுத்த மைல் கல்லாக குடி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை திறந்து இன்று வரை கோபாலப்பட்டிணம் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறது.

இந்த ஆழ்துளை கிணற்றின் மூலம் எடுக்கப்படும் நீரை எந்த விதமான செயற்கை வேதியியல் பொருட்களும் கலப்படம் செய்யாமல் பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றோம்.

மேலும் சேவை மனப்பான்மை அடிப்படையில் மட்டுமே மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மின் கட்டண உயர்வு, வாகனத்தின் எரிபொருள் (டீசல்) விலை உயர்வு, வேலை செய்யும் நபர்களின் சம்பளம் மற்றும் பொதுவான பராமரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு குடம் தண்ணீர் ரூ.7 என்று மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

GPM மக்கள் மேடையின் குடிநீர் திட்டத்தால் யாருக்கும் தீமை இல்லை என்பதை இந்த பதிவின் மூலம் மக்கள் மேடையின் 6-வது ஆலோசனை குழு சார்பில் தெரியப்படுத்துகின்றோம்.

அவதூறு பரப்புவதை தவிர்த்து விட்டு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 6-வது ஆலோசனை குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு விபரம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு
1) முகம்மது ரபீக் 96771 42293
2) முகம்மது இபுராகிம் 7502251234
3) முகம்மது மீராசா 80986 59390
4) முகம்மது முனோபர் 97913 57707
5) அலி அக்பர் 99760 77262
6) அபுபக்கர் சித்திக் 9003702205
7) சித்திக்ரகுமான் (வாட்ஸாப்) +966 55 469 5152

தகவல்: 
ஆலோசனை குழு 6,
GPM மக்கள் மேடை,
கோபாலப்பட்டிணம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments