கரோனா சான்றிதழ் விவகாரம்: திருச்சியில் இருந்து துபாய் செல்லும் விமானம் தாமதம்; பயணிகள் வாக்குவாதம்






திருச்சியில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 9.25 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், விமானம் கிளம்புவதில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. விமானத்தில் பயணிக்க விருந்த 142 பயணிகள் காத்திருந்தனர்.

இதையடுத்து சிலர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், விமானம் ரத்தானதா? அல்லது தாமதத்திற்கான காரணம் என்ன, எனக் கூறாததால் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் பயணிகளிடம் கூறுகையில், மத்திய அரசு ஏற்பாட்டின்பேரில், திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும். கரோனா பரிசோதனை சான்றுகளை, துபை விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது. மீண்டும் அங்கே கட்டணம் செலுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். ஆனால் சார்ஜாவில் ஏற்றுக்கொள்கின்றனர். இதனால் துபை பயணிகளை அருகில் உள்ள சார்ஜா விமான நிலையத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் விமான நிறுவனம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

துபாய்க்கு செல்வதற்கு விமான அந்த நிலைய அனுமதிக்காக காத்திருப்பதால்தான் இந்த தாமதம் என பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் புறப்பட பல மணி நேரம் தாமதமானது. 

இது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக துபாய் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து பயணிகள் காரில் துபாய்க்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதற்கு பயணிகள் ஒப்புதல் அளித்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments