அறந்தாங்கி வழியாக திருவாரூர்-காரைக்குடி இடையே டெமு ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்!திருவாரூர்-காரைக்குடி இடையே டெமு ரெயில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) மீண்டும் இன்று (புதன்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது.

எக்ஸ்பிரஸ் கட்டணத்துடன் இயக்கப்படும் இந்த ரெயில் திருவாரூரில் இருந்து புறப்பட்டு அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.04 மணிக்கு வந்து 1.05 மணிக்கு புறப்பட்டு செல்லும். 

காரைக்குடியில் இருந்து வரும் போது மாலை 3.29 மணிக்கு வந்து 3.30 மணிக்கு புறப்படும்.இன்று முதல் இயங்கும் 06197/98 திருவாரூர்⇋காரைக்குடி வழி அறந்தாங்கி DEMU(Unreserved) விரைவு ரயில்,  கீழ் கண்ட ரயில் நிலையங்களில் நிற்காது 

1. மாங்குடி 2. மாவூர் ரோடு 3. அம்மனூர், 4. ஆலத்தம்பாடி 5. மணலி 6. முத்துப்பேட்டை, 7. ஒட்டங்காடு, 8. வாள ரமணிக்கம், 9. கண்டனூர் புதுவயல் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களுக்கான நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

முன்பு மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ரயில் திருவாரூர், திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆயிங்குடி, அறந்தாங்கி, பெரியகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments