ஆவுடையார்கோவிலில் பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு!புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல சங்கம் மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, வேர்ல்டு விஷன் இந்தியா வட்டார வளர்ச்சி திட்டம் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார ரதத்தை ஆவுடையார்கோவில் பஸ்நிலையத்தில் இருந்து ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரதம் முக்கிய வீதிகளில் வழியாக சென்றது. இதில் குழந்தைகள் நல சங்க தலைவி ஸ்டெல்லா புஷ்பா ராணி, திட்ட மேலாளர் கிளாடிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் விடியல் கலை குழுவின் கலை நிகழ்ச்சிகள் ஆனந்த் குழுவினரால் நடத்தப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments