சிறுநீரக கோளாறால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு புதுகை அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி வழங்கல்!புதுக்கோட்டை காந்தி நகரில் சிறுநீரக கோளாறால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு புதுகை அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் சீறுநீர் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அறிந்த புன்னகை அறக்கட்டளையின் நிர்வாகிகள் அந்த குடும்பத்திற்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக நிதி போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை கௌரவத் தலைவர் ஜெகன் நிறுவன தலைவர் கலைபிரபு, அறங்காவலர் கரு.வடிவேலு, கந்தர்வக்கோட்டை ஒருங்கினைப்பாளர் ஆரணிபட்டி சரவணன், மற்றும் திருவப்பூர் பீர்முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments