ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றம்!இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆவுடையார்கோவிலில் நேற்று மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது. இதற்கு சபாநாயகராக வேலு தலைமை தாங்கினார்.

முன்னதாக தேசியக்கொடியை ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்து பேசினார்.

தீர்மானத்தை முன்மொழிந்து பாலசுப்பிரமணி பேசினார். விவாதத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் கணேசன், கட்சியின் மாவட்டக்குழு காளிமுத்து, வேகப் பெருமாள் அமிர்தம், நகர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று பேசினர். மின்சார திருத்த சட்டம் கொண்டுவராதே என்று விவாதம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments