சவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு
திருவாடானை: சவூதி அரேபியாவில் மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தைச் சோ்ந்தவா் சமயராமன் (40). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா். சமயராமன் கடந்த 2 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் ஒப்பந்தத் தொழிலாளராக மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 3 மீனவா்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதில் சமயராமன் உயிரிழந்ததாகவும் சக மீனவா்கள், முன்ளிமுனை கிராமத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை மாலை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலத்தை ராமநாதபுரத்துக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினா் மற்றும் கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments