புதுகை மக்கள் நீதிமன்றத்தில் 1,627 வழக்குகளுக்கு தீா்வு




புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1627 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஏ. அப்துல்காதா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.


சாா்பு நீதிபதி சி. சசிகுமாா், கூடுதல் சாா்பு நீதிபதி சி. அசோக் குமாா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் பி. ராஜா, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. பிச்சை உள்ளிட்டோரைக் கொண்ட இரு அமா்வுகள் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், வட்டார நீதிமன்றங்களில் 4 அமா்வுகளும் என மொத்தம் 6 அமா்வுகள் நடைபெற்றன.

உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, குடும்பப் பிரச்னைகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1627 வழக்குகளுக்கு தீ ா்வுகாணப்பட்டன. தீா்வுகாணப்பட்ட வழக்குகளின் மொத்த இழப்பீடு உள்ளிட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ. 4.02 கோடியாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments