கருப்பூர் கிராமத்தில் புன்னகை அறக்கட்டளை சார்பில் 2000 பனை விதைகள் நடவு!கருப்பூர் கிராமத்தில் புன்னகை அறக்கட்டளை சார்பில் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடவு செய்யபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், புண்ணியவயல் ஊராட்சி கருப்பூர் கிராமத்தில் ஏரி, கண்மாய் கரையில் 2000 பனைவிதை நடும் விழா புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடவு செய்யபட்டது. இதில் புன்னகை அறக்கட்டளையின் பொருளாளர் ஆ.சே.கலைமணி, கௌரவத் தலைவர் ஜெகன் ஜி முன்னிலை வகித்தார். கருப்பூர் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமரன் அவர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் இயற்கை விவசாயி அப்பாசாமி தலைமை தாங்கினார். 

இந்நிகழ்வில் அறங்காவலர் வடிவேலு, மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், கந்தர்வக்கோட்டை ஒருங்கினைப்பாளர் சரவணன், ஆவுடையார்கோவில் சுற்றுல தளம் பெருமாள், கடலூர் ராமராஜன், திருமயம் தொகுதி ஒருங்கினைப்பாளர் தமிழ் ஓவியம், கருப்பூர் திருவேலன், பூங்குடி கிங், அருண், விக்னேஷ்வரன், மாதவன்,முகேஷ், பாண்டிஸ்வரன் மற்றும் கஜன் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments