புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி; அதிகாரிகளுக்கு எம்.பி., எம் எம் அப்துல்லா பாராட்டு




தொடக்க காலத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டது. அதனால் தான் மக்கள் அச்சப்பட்டனர். தற்போது அந்த நிலைமை மாறி உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர் என மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வரை ,8 லட்சத்து ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

44 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் இலக்கை தாண்டி நேற்று ஒரு நாள் மட்டும் 66,766 பேருக்கு ;தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி சிறப்பாக செயல்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து நகராட்சி அதிகாரிகளை பாராட்டினார். அப்போது பேசிய மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா,  கொரோனா தடுப்பு ஊசி வந்தவுடன் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் பொதுமக்கள் அச்சப்பட்டனர். இதனால் தடுப்பூசி பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசி பயம் பொதுமக்களிடையே போய்விட்டது. ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பூசியை தற்போது செலுத்திக் கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த தடுப்பூசி முகாம் முகாமில் இலக்கை தாண்டி மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments