கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள்! குடிநீர் இணைப்பை துண்டித்த ஊராட்சி நிர்வாகம்!!கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் தண்ணீர் எடுக்க மின் மோட்டார்களை பயன்படுத்தி வரும் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பனி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்ணீர் இணைப்பில் முறைகேடாக மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. அதனடிப்படையில் குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கணக்கெடுப்பின் படி முறைகேடாக மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வரும் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


மேலும் முறைகேடாக மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது தெரிய வந்தால் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலும் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி எண்: 9865333092, 9443576630

இப்படிக்கு
தலைவர்
ஊராட்சி மன்றம்
கோட்டைப்பட்டினம்

தகவல்:லாபிர்,கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments