ஒரத்தநாடு அருகே 2 வயதில் 3 உலக சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டு
ஒரத்தநாடு அருகே 2 வயதில் 3 உலக சாதனை படைத்துள்ள சிறுவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் உரந்தைராயன்குடிக்காட்டை சேர்ந்த தம்பதி வசந்தகுமார்-கவிமொழி. இவர்களது 2 வயது மகன் கவின். பிறந்து 22 மாதங்களில் விளையாட்டு தனமாக இருந்தபோது, அவரது தாய் பல்வேறு நாடுகளை சேர்ந்த கொடிகள் மற்றும் பழங்களின் பெயர் சொல்லி கொடுத்துள்ளார்.

இதில் ஆர்வமாக இருந்த குழந்தை கவின் நாளடைவில் அந்தந்த நாட்டின் கொடிகள் பெயர்கள் மற்றும் பழங்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள் சொல்லி கொடுத்துள்ளார். பின்னர் அவனது தாய் கொடிகள் பெயர், தலைவர்கள் பெயரை கூறும்போது, அதற்கான புகைப்படத்தை எடுத்து தனது தாயிடம் கொடுத்துள்ளான். தனது மகனின் அபார திறமையை பார்த்த தாய் கவிமொழி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு அனுப்பியுள்ளார். இதில் பங்கு பெற்ற சிறுவன் கவின் 197 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளப்படுத்தி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது இவனின் மூன்றாவது சாதனையாகும். சிறுவன் கவின் தனது ஒன்றேமுக்கால் வயதில் “இந்தியா புக் ஆப் ரெக்கார்ஸ்” சாதனையாளர் புத்தகத்திலும், “கலாம் உலக சாதனையாளர்” புத்தகத்திலும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறுவனின் இந்த அபார அறிவு வளர்ச்சியை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments