மல்டி டிவைஸ் பயன்பாட்டு அம்சத்தை இனி 'Non Beta' பயனர்களும் டெஸ்ட் செய்யலாம் - வாட்ஸ் அப்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் செயலியில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும் அது முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. ஒரே நேரத்தில் ஒரு போன் மற்றும் கூடுதலாக நான்கு சாதனங்களில் (Linked Devices) தங்களது வாட்ஸ் அப் செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம் என்பதே அந்த புதிய அம்சம். இதன் மூலம் போனை தவிர டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட் மாதிரியான சாதனங்களை லிங்க் செய்து பயன்படுத்தலாம். 
அடுத்த சில மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என வாட்ஸ் அப் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது பீட்டா பயனர்கள் இந்த சேவையை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனர். அதே போல Non பீட்டா பயனர்களும் இதை சோதனை ரீதியில் பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் போனை இணைக்காமல் லிங்க் செய்யப்பட்ட சாதனங்களில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது Non பீட்டா பயனர்களையும் இதில் சேர்த்துள்ளது. விரைவில் வரும் அப்டேட்டில் அனைவரும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் Non பீட்டா பயனர்களை பீட்டா பயனார்களாக மாற்றியே வாட்ஸ் அப் இந்த சேவையை அவர்களுக்கு வழங்குகிறது. பீட்டா வெர்ஷனை பயன்படுத்தும் போது சில தடங்கல்கள் ஏற்படலாம் என்பதால் பயனர்கள் அதை செய்ய முன்வரவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments