புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏல அறிவிப்பு





புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் உள்ள 114 இரு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 116 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு 102 CRPC- யின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்த வந்தது. மேற்படி வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்ட அரசிதழ் எண் - 5 நாள் 14.11.2018 மற்றும் 14.12.2019 ஆகிய தேதிகளில் அரசிதழில் வெளியிடப்பட்டும், இது நாள் வரை யாரும் உரிமை கோரவில்லை என்பதால், மேற்படி வாகனங்கள் கைப்பற்றப்பட்ட வெகுநாட்கள் ஆகியுள்ள நிலையில், மேற்படி வாகனங்களின் மூலம் அரசுக்கு ஆதாயம் சேர்பிக்கும் பொருட்டு கைப்பற்றப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து 21.09.2021 - ம் தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், மண்டல துணை இயக்குநர், அரசு தானியங்கி பணிமனை திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், புதுக்கோட்டை ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் டெபாசிட் ( முன்வைப்புத் தொகை ) தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ 2000/-ம் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ . 5000/ -ம் நான்கு சக்கர வாகனங்களுக்கு டெபாசிட் ( முன்வைப்புத் தொகை ) தொகையாக ரூ10000/ -ம் செலுத்தி ஏலம் கோர வேண்டும், ஏலத்தொகையுடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும். ஏலம் கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 19.09.2021 தேதி வாகனங்களை பார்வையிட்டும் 20.09.2021 தேதி காலை 08.00 முதல் 10.00 மணிவரை டோக்கன் பெற்றுகொண்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. 

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments