மீமிசல், கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே நாள் இரவில் 7 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!




மீமிசல்  கோபாலப்பட்டிணம் ஒரே நாள் இரவில் 7 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடை வீதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் இரவு, பகல் என எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, கடையை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நேற்று காலை வழக்கம் போல் கடை திறப்பதற்காக உரிமையாளர்கள் வந்த போது அப்பகுதிகளில் தொடர்ந்து 10 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதில் மளிகைகடைகள் 3, மருந்து கடை 1, ஷாப்பிங் சென்டர் 1, கட்டுமான வேலைக்கு பொருட்களை வாடகைக்கு விடும் கடை1, பெட்டிக்கடை 1 ஆகிய 7 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்தது.

மற்ற 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து 7 கடை உரிமையாளர்களும் தனித்தனியாக மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் வழக்கு பதிவு செய்து, கொள்ளை நடந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிறகு அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்.

மக்கள் அதிகமாக நடமாடும் கடைவீதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 7 கடைகளில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. 🌹இரவு நேரத்தில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள மீமிசல் கடை தெருவில் தொடர் கொள்ளை நடந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது !வியாபாரிகள் சங்கம் சரியான இரவு நேர செக்யூரிட்டிஏற்பாடு செய்ய வேண்டும் !!👍👍

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.