சவூதி அரேபியாவில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாம்!
சவூதி அரேபியாவின் 91வது தேசிய தினத்தை முன்னிட்டு TNTJ ரியாத் மண்டலம் (நியூ செனையா கிளை) நடத்திய 117வது இரத்ததான முகாம்!!!

ரியாத்:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம், நியூ செனையா கிளை மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) இணைந்து நடத்திய 117வது மொபைல் இரத்ததான முகாம்  17/09/2021 வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணி முதல் 05:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் 60 மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் பதிவு செய்து உடல் தகுதி அடிப்படையில் 52 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
கொரோனா நோய் தொற்று பரவல் முன்னேச்சேரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அசாதாரண சூழ்நிலைகள் இருந்த போதிலும் பிறர் நலம் காக்கும் நோக்கத்தில் இங்கே பணியாற்றும் இந்தியர்கள் தங்களின் அளப்பரிய  இரத்ததான சேவையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து சவூதி அரேபியாவின் 91வது தேசிய தினத்தை முன்னிட்டு பிறருக்கு உதவும் வகையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 

இந்த முகாமில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் மற்றும் நியூ செனையா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

மனிதநேயப் பணியில் என்றும் ஆர்வமுடன்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மருத்துவ அணி, ரியாத் மண்டலம்
17.09.2021
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments