அடிப்படை வசதிகளை செய்யவிடாமல் தடுக்கும் அதிகாரிகள்! வல்லத்திராகோட்டை ஊராட்சி நிா்வாகத்தினா் உண்ணாவிரதம்!!ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் அரசு அதிகாரிகள் தடுப்பதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வல்லத்திராக்கோட்டை  ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கன்சல் பேகம்  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி குடிநீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தபோது அரசு அதிகாரிகள் ஊராட்சியில் நிதி இல்லை என்று கூறி அவர்களை எந்த அடிப்படை பணிகளையும் செய்ய விடாமல் தடுப்பதாகவும்  மேலும் இந்த ஊராட்சியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை  செயல்படுத்த விடாமல் அரசு அதிகாரிகள் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் வல்லத்திராக்கோட்டை  ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதி இருந்தும் நிதி இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.

இது குறித்து அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டபோது ஊராட்சி மன்ற தலைவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வல்லத்திராக்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் கன்சல் பேகம் வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடத்திலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் கன்சல் பேகம்  துணைத் தலைவர் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் சிலர் வல்லத்திராக்கோட்டை  பேருந்து நிலையம் அருகே வாயில் கருப்பு துணி கட்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments