மீமிசல் அருகே துணிகரம் வீடுபுகுந்து 8 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வீட்டின் பூட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 8 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள சிறுகடாவக்கோட்டையைச் சேர்ந்தவர் சோனையன் மகன் குமார்(32). இவர் கடந்த 22ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார். இரவு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 8 பவுன் செயின், வெள்ளி ஆபரணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து குமார் மீமிசல் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments