கொரோனா தடை உத்தரவால் கோட்டைப்பட்டினம் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம் ரத்து
கொரோனா தடை உத்தரவால் கோட்டைப் பட்டினம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வவலம் ரத்து செய் யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் வழி பாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தடை அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை அமலில் உள்ளதால், புகழ்பெற்ற கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்கா கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவின் கந்தூரி விழா புகழ்பெற்றதாகவும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வ லத்தின்போது ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் சகோதரத்துவத்துடன் சுமார் பல ஆயிரம் மக்கள் கூடு வார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்களில் திருவிழா நடத்த அக்டோபர் 3ம் தேதி வரை தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோட்டைப் பட்டினம் கந்தூரி விழாவில் சந்த னக்கூடு நிகழ்ச்சியின்போது மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கந்தூரி விழாவில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என அறந்தாங்கி ஆர்.டிஓசொர்ணராஜ் தடை விதித்தார். அரசின் தடை ஆணையை ஏற்ற கோட்டைப்பட் டினம் ராவுத்தர் அப்பா தர்கா சந்த னக்கூடு விழாவை கந்தூரி விழா நிர்வாகிகள் ரத்து செய்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி நிஷாபார்த்திபன் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் கந்தூரி விழாவிற்கு செல்லும் வாக னங்களை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடி ஏற் படுத்தி திருப்பி அனுப்பினர். கோட் டைப்பட்டினத்தில் கொரோனா தடை உத்தரவு காரணமாக சந்தனக் கூடு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதால், சந்தனக்கூடு விழாவை காண்பதற்காக வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments